பனீர் பாயசம் | KITCHEN 24

Image may contain: food



பனீர் பாயசம்
தேவையான பொருட்கள்:
1. பனீர் – 200 கிராம்
2. சீவிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
3. சர்க்கரை – முக்கால் கப்,
4. பால் – ஒரு லிட்டர்
5‌. ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்,
6. கண்டென்ஸ்டு மில்க் – 3 டேபிள்ஸ்பூன்,
7. நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
1. முதலில் பன்னீரை துருவிக்கொள்ளவேண்டும் .பிறகு பாலைக் காய்ச்சி, அதனுடன் சர்க்கரை, பனீர் துருவல் சேருங்கள். தீயைக் குறைத்துவைத்து, பாத்திரத்தில் இருக்கும் பால், முக்கால் பாகமாக ஆகும் வரை நன்கு கொதிக்கவிடவேண்டும் .
2. பின் அவ்வப்போது கிளறிவிடுங்கள். முக்கால் பாகமாக வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, கைவிடாமல் கிளறவேண்டும் .
3. பின்னர் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சீவிய பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு இறக்குங்கள்.
சுவையான பனீர் பாயசம் ரெடி

Comments